ENG vs SA, 1st T20I: ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை முறியடிப்பாரா பட்லர்?
Jos Buttler Record: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், கடைசி போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்ததற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். கார்டிஃபில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தால், அவர் ஜானி பேர்ஸ்டோவை முந்தி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜானி பேர்ஸ்டோவ் 501 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், ஜோஸ் பட்லர் 21 போட்டிகளில் விளையாடி 498 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் அவர், 137 டி20 போட்டிகளில் விளையாடி 35.92 சராசரியாகவும் 147.05 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3,700 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 1 சதத்தையும் 27 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- ஜானி பேர்ஸ்டோவ் - 16 போட்டிகளில் 501 ரன்கள்
- ஜோஸ் பட்லர் - 21 போட்டிகளில் 498 ரன்கள்
- குயின்டன் டி காக் - 13 போட்டிகளில் 405 ரன்கள்
- இயோன் மோர்கன் - 19 போட்டிகளில் 402 ரன்கள்
- ஏபி டிவில்லியர்ஸ் - 15 போட்டிகளில் 390 ரன்கள்
ஜோஸ் பட்லருக்கு மொத்தம் 466 டி20 போட்டிகளில் அனுபவம் உள்ளது என்பதையும், இந்த வடிவத்தில் அவர் 13,338 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் 7ஆம் இடத்தில் உள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், ஜானி பேர்ஸ்டோவின் இந்த சிறப்பு சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெதெல், ஹாரி புரூக் (கேப்டன்), சாம் கரன், டாம் பான்டன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித்.