இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ரோஸ் பவுல் மைதானம், சௌத்தாம்டன்
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றாலும் இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக தோல்வியடைந்தது.
இருப்பினும் பட்லர், பேர்ஸ்டோவ், மோயீன் அலி, லிவிங்ஸ்டோன், மாலன் என நட்சத்திர பேட்டர்களும், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட டி20 ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்களும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் டேவிட் மில்லர் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது போட்டியில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
குயிண்டன் டி காக், ஐடன் மார்க்ரம், வாண்டர் டுசென், டேவிட் மில்லர், ரிலே ரொஸ்ஸோவ் என அதிரடி பேட்ஸ்மேன்களும், ரபாடா, இங்கிடி, ஷம்ஸி உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இருப்பது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 24
- இங்கிலாந்து - 12
- தென் ஆப்பிரிக்கா - 11
- முடிவில்லை - 1
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கே), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், ரிச்சர்ட் க்ளீசன், ரீஸ் டாப்லி.
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரிலீ ரோசோவ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், ஜோஸ் பட்லர்
- பேட்டர்ஸ் - ரிலே ரோசோவ், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி
- பந்துவீச்சாளர்கள் - நல்லது, அடில் ரஷித், ரீஸ் டாப்லி