ENG vs SL, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Sat, Jun 26 2021 13:45 IST
CRICKETNMORE

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில் இலங்கை-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்டப்டனில் நாளை (ஜூன் 26) நடக்கிறது.

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் : இங்கிலாந்து vs இலங்கை 
  •     மைதானம்: ஏஜஸ் பவுல், சவுத்தாம்ப்டன் 
  •     நேரம் : இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து அணி

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. 

அதிலும் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் தனிப்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகியுள்ளது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

பந்துவீச்சில் டேவிட் வில்லி, மார்க் வுட், அதில் ரஷித் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதும் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

இலங்கை

குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி சமீப காலமாக சரிவர விளையாடமல் தோல்வியை தழுவி வருகிறது. அதிலும் தற்போது டி20 தொடரையும் இழந்துள்ளது அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இங்கிலாந்து அணியுடனான கடைசி டி20 போட்டியிலாவது அறுதல் வெற்றியைப் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

நேருக்கு நேர்

இதுவரை இங்கிலாந்து - இலங்கை அணிகள் 11 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 7 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், சாம் பில்லிங்ஸ், ஈயன் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷீத், மார்க் வுட்.

இலங்கை - தனுஷ்கா குணதிலக, ஆவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசுல் பெரேரா (கே), குசால் மெண்டிஸ், தாசுன் ஷானகா, நிரோசன் டிக்வெல்லா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, அகில தனஞ்சய, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப்.

ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் - ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், குசல் பெரேரா
  •     பேட்ஸ்மேன்கள் - ஜேசன் ராய்,  தனுஷ்கா குணதிலகா, குசால் மெண்டிஸ்
  •     ஆல்ரவுண்டர்கள் - துசன் ஷனகா, சாம் கரண், வாணிந்து ஹசரங்கா
  •     பந்து வீச்சாளர்கள் - கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை