இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டதன் காரணத்தை விளக்கிய கனேரியா!

Updated: Mon, Sep 19 2022 13:17 IST
Image Source: Google

செப்டம்பர் 12ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட பட்டியலில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கேஎல் ராகுல், ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 16 டி20 போட்டிகளில் 250க்கும் குறைவான ரன்களை அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். மேலும் இவரது சராசரி மிகவும் குறைவாக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் போதிய அளவிற்கு இல்லை என்பதால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்காமல் வெளியேற்றுகிறது. ஆனால் ஃபார்மில் இல்லாத கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் போன்றோருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறது. சஞ்சு சாம்சன் போன்ற திறமை வாய்ந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை பிசிசிஐ பாலிடிக்ஸ் காரணமாக சீரழித்து வருகிறது என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட ஒரு வார காலம், இவரை ஏன் எடுக்கவில்லை? என்பது பற்றிய பேச்சுக்களே நிலவி வந்தன. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார்.

வெள்ளிக்கிழமை அன்று இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் ரசிகர்கள் கொடுத்த பெரும் அழுத்தத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று டேனிஷ் கணேரியா கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகள் மூலம் சஞ்சு சாம்சன் தன்னை நிரூபித்து இருக்கிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சை மிகச் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா போன்ற மைதானம் இவருக்கு சிறப்பாக இருக்கும். இந்திய அணிக்கு ஒரு சிறந்த காரணியாக இவர் இருந்திருப்பார். ஆனாலும் ரிஷப் பன்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் இந்திய அணி எடுத்துவிட்டது. இதனால் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்து தங்களது கேள்விகளால் பிசிசிஐ மீது கடும் தாக்குதல் நிகழ்த்தினர். 

மக்கள் கொடுத்த இந்த அழுத்தத்தின் காரணமாகவே இந்திய ஏ அணிக்கு இவரை கேப்டனாக நியமித்து இருக்கின்றனர். சஞ்சு சாம்சன் இந்த தொடரை வெற்றி பெற்றால், இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை பெறுவார். மேலும் தனிப்பட்ட பேட்டிங்கில் மேலும் நன்றாக செயல்பட்டால் அடுத்தடுத்த தொடர்களில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை