பும்ரா விலகல் குறித்து கௌதம் கம்பீர் கருத்து!

Updated: Tue, Jan 10 2023 12:48 IST
Gautam Gambhir slams critics for blaming the IPL after Team (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மீண்டும் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளார். பும்ராவின் காயம் குறித்து விளக்கம் அளித்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா, வலைப் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பு பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்றும் ஐபிஎல் தொடரில் விளையாட தான் அவர் இப்படி ஓய்வில் இருப்பதாகவும் விமர்சனம் செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், “உலகக் கோப்பை நடைபெறுவது என்றால் வீரர்கள் அதற்குத்தான் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் வீரர்களுக்கு இப்படி அடிக்கடி காயங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக வேண்டும்.

ஐபிஎல் அணிகளை விட இந்தியாவுக்கு விளையாடுவது தான் முக்கியம் என்பதை வீரர்கள் உணர வேண்டும். ஐபிஎல் அணிகள் கூட பாதிக்கலாம். அதில் தவறு இல்லை ஆனால் முக்கிய வீரர்கள் இல்லாமல் உலக கோப்பை கொண்ட தொடரில் இந்திய அணி பாதிக்க கூடாது .
ஐபிஎல் தொடர் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனால் உலகக்கோப்பை நான்காண்டுகளுக்கு ஒரு முறை தான் நடைபெறும். இதனால் எது முக்கியம் என்பதை வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பேசிய கம்பீர் நடபாண்டில் ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. உலக கோப்பைக்காக இந்திய அணி தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரர்கள் யாரேனும் ஓய்வு தேவைப்பட்டால் டி20 போட்டியில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை