Jasprit bumrah
பும்ரா, ஸ்ரேயாஸ் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா எப்போது கிரிக்கெட் விளையாட திரும்புவார் என்பதைத்தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பும்ரா தனி ஆளாகவே நின்று பல கிரிக்கெட் போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பும்ரா முக்கிய பல போட்டிகளில் விளையாடவில்லை.
பும்ரா இல்லாததால் தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவில்லை. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் பும்ரா கலந்து கொள்ளவில்லை. பும்ராவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆறு வார காலம் ஓய்வில் இருந்த பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளார்.