அயர்லாந்து தொடரில் இவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

Updated: Mon, Jun 20 2022 13:14 IST
Gavaskar names player who deserved a place in team for Ireland T20Is (Image Source: Google)

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. சீனியர் வீரர்கள் ஜூலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த வீரர்களுக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கு டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கருதப்பட்டதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதிமுதல் அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15ஆவது சீசனில் கோப்பை வென்ற கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்லும் அணியுடன் இணைய உள்ளதால், அவர் இத்தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.

இந்திய டி20 அணி : ஹார்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ராகுல் திரிபாதி, யுஜ்வேந்திர சஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

இந்திய அணியில், தென் ஆப்பிரிக்க தொடரில் வாய்ப்பினை பெறாத சஞ்சு சாம்சன், ராகுல் திபிராதி ஆகிஓருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறந்த பினிஷர்களில் ஒருவராக இருந்த ராகுல் திவேத்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இதற்கு சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ‘‘ஐபிஎலில் சிறப்பாக விளையாடிவர்களுக்கு தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து தொடரில் இடம் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், அயர்லாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட ராகுல் திவேத்தியாவுக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை. நிச்சயம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை