2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, May 13 2025 13:13 IST
Image Source: Google

இந்திய அணி எதிவரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04அம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி  விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “இந்த ஆட்டத்தில் அவர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்துள்ளனர். மீண்டும், தேர்வுக் குழு 2027 உலகக் கோப்பையைப் பற்றிப் பரிசீலிக்கும். 2027 உலகக் கோப்பைக்கான அணியில் அவர்களால் இடம் பெற முடியுமா என்பதை அவர்கள் பரிசீலிப்பார்கள். 'அவர்கள் செய்து வரும் பங்களிப்புகளை அவர்களால் செய்ய முடியுமா?' அதுதான் தேர்வுக் குழுவின் சிந்தனைச் செயல்முறையாக இருக்கும்.

தேர்வுக் குழு 'ஆம், அவர்களால் முடியும்' என்று நினைத்தால், அவர்கள் இருவரும் அதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன். ஆனால், யாருக்குத் தெரியும், அடுத்த ஒரு வருடத்தில் அல்லது அதற்குப் பிறகு, அவர்கள் நல்ல ஃபார்மில் இருந்தால், அவர்கள் தொடர்ந்து சதங்களை அடித்தால், கடவுளால் கூட அவர்களை கைவிட முடியாது” என்று கூறியுள்ளார். 

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளனர். ஆனால் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது 2027ஆம் ஆண்டில் தான் நடைபெறும் என்பதால் அதற்காக இருவரும் தயாராக இருப்பார்களா? அவர்களின் ஒருநாள் ஃபார்ம் சிறப்பாக இருக்குமா? என்ற கேள்விகளும் உள்ளன.

Also Read: LIVE Cricket Score

இதுவரை விராட் கோலி 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 சதங்கள், 74 அரைசதங்களுடன் 14181 ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா இதுநாள் வரை 272 போட்டிகளில் விளையாடி 32 சதங்கள் மற்றும் 58 அரைசதங்களுடன் 11168 ரன்களை எடுத்துள்ளார். ஒருவேளை அவர்கள் இருவரும் இதே ஃபார்மை தொடரும் பட்சத்தில் நிச்சயம் 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை