ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் நடப்பு தொடரில் தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு பிறகு, கடந்த போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - எம்சிஏ மைதானம், புனே
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க ரவிந்திர ஜடேஜா சென்னை அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டிக்கான சென்னை அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
பெங்களூருவுக்கு எதிராக அரை சதம் விளாசிய ராபின் உத்தப்பா, ஷிவம் துபே மீண்டும் கைகொடுக்கலாம். ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு எழுச்சி பெற வேண்டும். கேப்டன் ஜடேஜா, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். அத்துடன் சென்னை அணியின் பந்து வீச்சும் ஏற்றம் காண வேண்டும். அசுர பலத்தில் உள்ள குஜராத் அணியை சமாளிக்க வேண்டும் என்றால் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அபாரத் திறனை வெளிப்படுத்துவது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.
அதேசமயம் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (228 ரன்கள்), சுப்மான் கில் (200 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் லோக்கி ஃபர்குசன், முகமது ஷமி அசத்துகின்றனர். இவர்களுக்கு ஹர்திக் பாண்டியா ஒத்துழைப்பு தருவது கூடுதல் பலம். சுழலில் ரஷித் கான் நம்பிக்கை அளிக்கிறார்.
வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றியை தொடர முடியும். அதே நேரத்தில் குஜராத் அணியும் தொடர் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
உத்தேச அணி
குஜராத் டைட்டன்ஸ் - மேத்யூ வேட்/ ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷுப்மான் கில், விஜய் சங்கர்/ சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், லாக்கி ஃபர்குசன், முகமது ஷமி, யாஷ் தயால்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கே), எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான்/ ஆடம் மில்னே, மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி/ ராஜ்வர்தன் ஹங்கேகர்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ வேட்
- பேட்டர்ஸ் - ஷிவம் துபே, ராபின் உத்தப்பா, ஷுப்மான் கில், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - மகேஷ் தீக்ஷனா, டுவைன் பிராவோ, ரஷித் கான், லாக்கி ஃபர்குசன்