ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Tue, Oct 04 2022 21:45 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் 3விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மைதானத்தில் அனைத்து திசைகளிலும் எளிதாக அடித்த ஆடும் திறமை படைத்த இவருக்கு மிஸ்டர் 360 என்ற பட்டமும் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான வீரர்களில் ஒருவராக திகழும் ஏபிடி வில்லியர்ஸ், கடந்த 2011 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார்.

ஐபிஎல் தொடரில் 157 போட்டிகளில் பங்கேற்று 4,552 ரன்கள் அடித்துள்ள ஏபிடி வில்லியர்ஸ் 2 சதங்களும் 37 அறைசதங்களும் அடித்துள்ளார். விராட் கோலிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக வலம் வந்த ஏபிடி வில்லியர்ஸ், தான் விளையாடிய காலத்தில் எப்படியாவது பெங்களூரு அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிடலாம் என்று பலமுறை முயற்சி செய்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடர் நடக்கும் போது சின்னசாமி மைதானத்தில் சென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஏபிடி வில்லியர்ஸ், “அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்கும் பொழுது நான் சின்னசாமி மைதானத்திற்கு செல்வேன், விளையாடுவதற்காக இல்லை அங்கு இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்களிடம் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவே செல்லவுள்ளேன். 

மேலும் கடந்த காலத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பேன், என்னால் இனி மேல் கிரிக்கெட் விளையாட முடியாது, என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தான் யூட்யூப் சேனல் துவங்க உள்ளதாகவும் அதில் முதல் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி தான் அழைக்க உள்ளேன்.

மேலும் தனக்கு அதிக வயதாகி விட்டது. அதனால் எனக்கு லெஜண்ட்ஸ் லீக் போட்டியில் விளையாட அழைப்பு வந்தது. ஆனால் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதினால் அதனை மறுத்து விட்டடேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை