WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!

Updated: Fri, Jul 25 2025 10:25 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

லெய்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் 39 ரன்களையும், சமித் படேல் 24 ரன்களிலும், கேப்டன் மோர்கன் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வெய்ன் பார்னெல், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடைய தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏபிடி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காம. 15 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 116 ரன்களையும், ஹாசிம் அம்லா 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் நடப்பு உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான டி வில்லியர்ஸ் கடந்த் 2018ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் அவர் அந்த அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 சதம், 46 அரைசதங்களுடன் 8765 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 25 சதம், 53 அரைசதங்கள் என 9577 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 10 அரைசதங்களுடன் 1672 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடர் உள்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் கடந்த 2021ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் அவர் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியில் அபாரமான சதத்தை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை