IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள பிரமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - அறிமுக வீரர் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து தவானுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 27 ரன்கள் எடுத்திருந்த சாம்சன், ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஷிகர் தவான் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். இதில் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2ஆவது அரைசதத்தை கடந்த கையோடு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவானும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சமீரா, ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.