WI vs IND, 2nd T20I: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Tue, Aug 02 2022 11:32 IST
IND vs WI: West Indies Beat India By Five Wickets In 2nd T20I (Image Source: Google)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 29ஆம் தேதி தொங்கி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இராண்டவது போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற விருந்தது. இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், போட்டிக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

இதையடுத்து தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவி பிஸ்னோய்க்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவரைத் தொடர்ந்து 11 ரன்களில் சூர்யகுமார் யாதவும், 10 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக தொடங்கினாலும் 24 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின் 31 ரன்களி ஹர்திக் பாண்டியாவும், 27 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவும் விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வினும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் 1 ரன்னுடன் வெளியேறினார். 

இதனால் 19.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஒபெத் மெக்காய் 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உள்பட 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

அதைத்தொடர்ந்து 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸுக்கு பிரண்டன் கிங் – கெய்ல் மேயர்ஸ் ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 46 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

அதில் கெய்ல் மேயர்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்த சில ஓவர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்து 68 ரன்கள் குவித்த பிரண்டன் கிங் வெற்றியை உறுதி செய்து 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரோவ்மன் போவல் 5 ரன்களில் ஆட்டமிந்தாலும் மறுபுறம் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட  தாமஸ் 31 ரன்கள் குவித்து தேவையான பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரிலேயே 141 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இதன்மூலம் 1 – 1 என்ற கணக்கில் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை