Romario Shepherd Video: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபர்ட் அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி நேற்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 52 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபர்ட் 56 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்மீத் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்காஸ் அணியில் ஷியாம் ஜஹாங்கீர் 40 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

மேலும் இப்போட்டியில் யூனிகார்ன்ஸ் அணி 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழலில் களமிறங்கிய ரொமாரியோ ஷெஃபெர்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 31 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்ததுடன், பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் பங்காற்றினார். இதன்மூலம் அவர் ஆட்ட்நாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் ரொமாரியோ ஷெஃபர்ட் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்படி இன்னிங்ஸின் கடைசி ஓவரை ஒபேத் மெக்காய் வீசிய நிலையில், அந்த ஓவரை எதிர்கொண்ட ரொமாரியோ ஷெஃபர்ட் ஓவரின் இரண்டாவது பந்தில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்தார். அதன்பின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட அவர் டீப் ஸ்கெயர் லெக் திசையில் சிக்ஸர் அடித்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதன்பின் அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ரோமாரியோ ஷெஃபர்ட் லான் ஆன் திசையில் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் அந்த ஓவரில் யூனிகார்ன்ஸ் அணி மொத்தமாக 22 ரன்களைச் சேர்த்த நிலையில், ஓவரின் கடைசி பந்தில் ரொமாரியோ ஷெஃபர்ட் தந்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ரோமாரியோ ஷெஃபர்ட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News