வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஷாய் ஹோப் தொடர்கிறார். மேகும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் அகீம் அகஸ்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், எவின் லூயிஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியில் இரண்டு வடிவங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, காரி பியர், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அமீர் ஜாங்கு, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ரமோன் சிம்மண்ட்ஸ்