IND vs AUS, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Sep 22 2022 15:59 IST
India vs Australia, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11 (Image Source: Google)

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று முந்தினம் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - விதர்பா கிரிக்கெட் மைதானம், நாக்பூர்
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி தகவல்கள்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்களை அடித்தும் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் சொதப்பல், பீல்டிங் சொதப்பல்தான்.

உமேஷ் யாதவ் தனது முதல் ஓவரிலேயே தொடர்ந்து 4 பவுண்டரிகளை அடிக்கவிட்டார். இதனால், இவருக்கு அடுத்த மூன்று ஓவர்களையும் முழுவதுமாக கொடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. மேலும் டெத் பௌலராக ஹர்ஷல் படேல் மட்டுமே இருந்ததால் கடைசி நேரத்தில் அழுத்தங்களுடன் பந்துவீசினார். புவனேஷ்வர் குமார் பவர் பிளே பௌலர் என்பதால் டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களை வீச வேண்டும் என்ற நிலை வரும்போது சொதப்பிவிடுகிறார்.

இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு பும்ராதான். இவர் அணிகளுக்குள் வந்துவிட்டால், இந்த மூன்று பிரச்சினைகளும் காணாமல் போய்விடும். ஆம், பும்ரா வந்துவிட்டால் புவனேஷ்வர் குமார் பவர் பிளேவில் மூன்று ஓவர்களை வீசிவிடுவார். பும்ரா இரண்டு ஓவர்களை வீசிவிடுவார். இறுதியில் டெத் ஓவர்களின்போது ஹர்ஷல் படேலுக்கு துணையாக பும்ரா இரண்டு ஓவர்களை வீசுவார். இதனால், ஹர்ஷல் படேலும் அழுத்தங்கள் இல்லாமல் பந்துவீசி பட்டையக் கிளப்ப முடியும்.

யுஜ்வேந்திர சஹல் கடந்த 5 டி20 போட்டிகளிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பி வருகிறார். இதனால், இன்று ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கினால் இந்திய அணியின் பந்துவீச்சு குறை தீர்ந்துவிடும். அஸ்வின் பலவிதமான பந்துவீச்சுகளை வைத்திருக்கிறார். இவரால் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால், இன்று அஸ்வின், பும்ரா ஆகியோரை கொண்டு வரும் பட்சத்தில் இந்திய அணி முழுமையடைந்துவிடும்.

கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மற்றொரு காரணம் கேட்ச்களை பிடிக்காமல் விட்டது. இந்த குறையை சரிசெய்யவில்லை என்றால், பந்துவீச்சு எவ்வளவு பலமாக இருந்தாலும் தோல்விதான் கிடைக்கும். மற்றபடி இந்திய அணி பேட்டிங்கில் வலுவாகத்தான் இருக்கிறது. தினேஷ் கார்த்திக்கை ஆல்-ரவுண்டர்களுக்கு முன்பே களமிறக்காமல் இருப்பதுதான் குறையாக இருக்கிறது.

அதேசமயம் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியைத் தனதாக்கியது. அதிலும் காமரூன் க்ரீன், மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித், டிம் டேவிட் என சிறப்பான பாங்களிப்பை வழங்கியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அவர்களுடன் ஆரொன் ஃபிஞ்ச், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்றாக தான் இருக்கும். 

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஆடம் ஸாம்பா, நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • இந்தியா - 13
  • ஆஸ்திரேலியா - 10
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இந்தியா - கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸிவ்ன், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச்(கே), கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - மேத்யூ வேட்
  •      பேட்டர்ஸ் – கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்
  •      ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல்
  •      பந்துவீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், நாதன் எல்லிஸ், ஜஸ்பிரிட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை