India vs australia
WTC 2023 Final: 469 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்மித் 95 ரன்களுடமும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்மித் தனது சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 163 ரன்களிலும், ஸ்மித் 121 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் அலெக்ஸ் கேரி தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.