அண்டர் 19 உலகக்கோப்பை: கோப்பையை வெல்வது யார்? இந்தியா vs இங்கிலாந்து!

Updated: Fri, Feb 04 2022 13:51 IST
India vs England, U19 World Cup Final – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

ஐசிசியின் 14ஆவது அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இன்டீஸில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் அரைஇறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

முதல் அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடந்த 2ஆவது அரை இறுதியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா - இங்கிலாந்து
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட் மைதாம, ஆண்டிகுவா
  • நேரம் - மாலை 6.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்திய அணி தொடர்ந்து 4ஆவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஒட்டு மொத்தமாக 8ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் (2000, 2006, 2008,2012, 2016, 2018,2020) நுழைந்தது.

4 முறை சாம்பியனான (2000, 2008,2012, 2018) இந்தியா 5ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியில் ரகுவன்‌ஷஷி, ஷேக் ரஷீத், ஹர்நுர் சிங் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

இதில் ரகுவன்ஷி 5 ஆட்டத்தில் 278 ரன் எடுத்துள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் கேப்டன் யாஷ்துல் சதம் அடித்து அசத்தினார். பந்து வீச்சில் ரவிக்குமார், ராஜ்வர்தன், விக்கி ஒஸ்ட்லால், நிஷாந்த் சிந்து ஆகியோர் சிறப்பான நிலையில உள்ளனர். பேட்டிங் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. 

அதேபோல் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கேப்டன் டாம் பிரஸ்ட் 292 ரன்களை குவித்துள்ளார். ஜார்ஜ் தாமஸ், ஜார்ஜ் பெல்ஜேக்கப் பெத்ஹெல், வில்லியம் லக்ஸ்டன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

பந்து வீச்சில் ஜோஸ்வா பாஸ்டன், ரெஹான் அகமது, தாமஸ் ஸ்பின்வால், ஜேம்ஸ் சேல்ஸ் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. 

அந்த அணி இதற்கு முன் 1998ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. தற்போது 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி

இந்தியா - ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல் (கே), நிஷாந்த் சிந்து, ராஜ் பாவா, கௌஷல் தம்பே, தினேஷ் பனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி ஓஸ்ட்வால், ரவி குமார்

இங்கிலாந்து - ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் பிரஸ்ட் (கே), ஜேம்ஸ் ரெவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரெஹான் அகமது, அலெக்ஸ் ஹார்டன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோசுவா பாய்டன்

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் ஹார்டன்
  • பேட்டர்ஸ் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷேக் ரஷீத், யாஷ் துல், ஜார்ஜ் தாமஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ராஜ் பாவா, டாம் பிரஸ்ட், ஜேக்கப் பெத்தேல்
  • பந்துவீச்சாளர்கள் - விக்கி ஓஸ்ட்வால், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஜோஷ் பாய்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை