முதல் டி20 : இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Nov 16 2021 15:16 IST
India vs New Zealand, 1st T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்துடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை தொடருன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இத்தொடரின் முதல் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். 

மேலும் இத்தொடரில் விராட் கோலி, ஷமி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்சல் படேல், ஆவேஷ் கான் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ், ஆகியோரும் மீண்டும் இந்திய டி20 அணியில் இணைந்திருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் உலகக்கோப்பை இறுதிவரை முன்னேறிய நியூசிலாந்து அணி, மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட்டிற்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் நியூசிலாந்து அணியில் கப்தில், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர் இருப்பது நிச்சயம் எதிரணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • இந்தியா வெற்றி - 8
  • நியூசிலாந்து வெற்றி - 9

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், டாட் ஆஸ்டில், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், கைல் ஜேமிசன், இஷ் சோதி, டிம் சௌதி(கே), ஆடம் மில்னே.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், மார்ட்டின் கப்தில், சூர்யகுமார் யாதவ்
  • ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல், வெங்கடேஷ் ஐயர், ஜேம்ஸ் நீஷம்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், இஷ் சோதி, டிம் சௌதி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை