இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில் கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல், அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய சீனியர் அணியினர் இன்று ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் அணியினர் களமிறங்க உள்ளனர். இதனால், இளம் அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷிகர் தவன் கேப்டனாக இருப்பதால், அவர் நிச்சயம் லெவன் அணியில் இருப்பார். இவருடன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் ஷுப்மன் கில்லுக்கு கிடைக்கலாம்.
இதனைத் தொடர்ந்து மிடில் வரிசையில் ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஐபிஎல் 15ஆவது சீசனில் கலக்கிய ராஜத் படிதர் அல்லது ராகுல் திரிபாதிக்கு 6ஆவது இடம் கிடைக்கும்.
ஆல்-ரவுண்டர்கள் இடத்தில் தீபக் சஹார், ஷாபஸ் அகமது இடம்பெறுவார்கள் எனக் கருதப்படுகிறது. முகமது சிராஜ், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி
இந்தியா - ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்
தென் ஆப்பிரிக்கா - ஜன்மேன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் – ஷிகர் தவான், ஜன்மேன் மாலன், ஷுப்மான் கில், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், டுவைன் பிரிட்டோரியஸ்
- பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ்