இந்திய நிச்சயம் பாகிஸ்தான் சென்று விளையாடாது - ஜெய் ஷா!

Updated: Tue, Oct 18 2022 15:55 IST
India Will Not Travel To Pakistan For 2023 Asia Cup, Confirms Jay Shah (Image Source: Google)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் அதன் மீதான எதிர்பார்ப்பும், அதற்கு கிடைக்கும் வரவேற்பும் வேற லெவலில் இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன.

2012ஆம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிக்கவில்லை.

ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ  அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. அதில் விளையாட பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு அனுமதி கொடுக்கவேண்டும். இது குறித்து இன்று நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, இந்தியா நிச்சயம் பாகிஸ்தானிற்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடாது என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஆசியக் கோப்பைக்கான நடுநிலை இடம் முன்னெப்போதும் இல்லாதது அல்ல. நாங்கள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் நடுநிலையான மைதானத்தில் மட்டுமே விளையாடுவோம் என முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை