ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் விளையாட ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்க்கான ஏற்பாடுகளை பிசிசிஐ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளதால், வீரர்கள் ஏலம் மெகா ஏலமாக வருகிற பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி தொடரின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் தக்கவைக்கப்படாதபோது, ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் என்னை அழைத்து, இது முக்கியமாக பர்ஸ் மேலாண்மை என்று கூறினார். அவர்கள் என்னை மீண்டும் அணியில் சேர்க்க விரும்புவார்கள், நானும் மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனெனில் ஆர்சிபி மற்றும் இந்த பருவம் (2021) எனது முழு வாழ்க்கையையும் எனது முழு வாழ்க்கையையும் மாற்றியது. இருப்பினும், ஏலத்தைப் பொறுத்தவரை, நான் இதுவரை எந்த உரிமையாளரிடமிருந்தும் கொரிக்கையை பெறவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மகேந்திர சிங் தோனி தான என்னைப் பொறுத்தவரையில் உலகின் மிகச்சிறந்த கேப்டன். மேலும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட மிகவும் விருப்பமாகவுள்ளேன் என்று தெரிவித்தார்.
கடந்த சீசனில் மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய ஹர்ஷல் படேல் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியதுடன், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையையும் சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.