ஐபிஎல் 2022: மூன்றாவது முறையாக கேஎல் ராகுலுக்கு அபராதம்!
ஐபிஎல் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 168/6 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 132 /8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேப்டன் கே.எல்.ராகுல். டிக்காக் (10), ஸ்டோய்னிஸ் (0), க்ருணால் பாண்ட்யா (1), தீபக் ஹூடா (10), ஆயுஸ் பதோனி (14) என ஏமாற்றினர். எனினும் ஒற்றையாளாக போராடிய கே.எல்.ராகுல் 62 பந்துகளில் (103 ரன்கள்) சதமடித்து அசத்தினார். இதனால் இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் விருதுடன் மற்றொரு அதிர்ச்சியும் தந்துள்ளனர். அதாவது கே.எல்.ராகுலுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பிசிசிஐ உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது 2வது முறை என்பதால் இந்த முறை அணியின் மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக்கான ஊதியத்தில் 25% சதவீதத்தை செலுத்த வேண்டும்.
ஸ்லோ ஓவர் ரெட் என்பது டி20ல் ஒரு அணி முதல் ஒரு மணி நேரத்திற்குள் 14.11 ஓவர்கள் வீசியிருக்க வேண்டும். அதாவது 20 ஓவர்களை வீச 1.25 மணி நேரம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நேற்று லக்னோ அணி கொடுத்த நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டனர். இது இரண்டாவது முறையாகும்.
இதே தவறு மீண்டும் ஒருமுறை நடைபெற்றால், அணியின் கேப்டனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 100% சதவீதத்தையும் அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்படுவார். சக அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 50% அல்லது 12 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.