ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்கலம்; ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Updated: Tue, Jan 10 2023 20:39 IST
IPL 2023 to be streamed for free on JioCinema in 11 languages! (Image Source: Google)

கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் உரிமைகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கையில் தான் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20,500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே காண முடிந்தது. அதுவும் குறிப்பிட்ட பணம் செலுத்தி இருந்தால் தான் பார்க்க முடியும். இதனாலேயே பல ரசிகர்கள் போட்டியை நேரலையில் பார்க்க முடியாமல் மறுநாளை ஹைலைட்ஸுகளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்காகவே இலவசம் கொடுத்துள்ளது வியாகாம் நிறுவனம். அதாவது ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் பார்க்கலாம் என முடிவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ், ஆங்கிலம், போஜ்பூரி உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு ஒளிபரப்ப்பு இருக்கும் எனக்கூறப்படுகிறது.

ஹாட்ஸ்டாரை விட அதிக கோடிகளை குவித்து உரிமையை பெற்றுவிட்டு எதற்காக இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால் அங்கு தான் திட்டத்தையே வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஜியோ நிறுவனம் தற்போது தான் செயலியை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே முதலில் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் 50 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ டிவி செயலிக்கு கொண்டு வர குறிவைத்துள்ளனர். இதற்காக தான் ஐபிஎல் இலவசம் என்ற திட்டம். இதே போல முதலீட்டாளர்களுக்கான தொகைகளையும் குறைத்துள்ளது. முதலில் குறைந்த அளவில் லாபம் பெற்று வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டால், பின்னர் ஏகபோகத்திற்கு லாபம் ஈட்டலாம் என்பதை கணித்தே இம்முடிவை எடுத்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை