ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சய் பங்கார், மைக் ஹெசன்!

Updated: Mon, Jul 17 2023 12:55 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆனால் இந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆண்டுதோறும் பலமான அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை தவறவிடும் போதும் ஆர்சிபி ரசிகர்கள் வருத்தமடைகிறார்கள். 

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது. அதேவேளையில் மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணி கோப்பையை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றியது.

இன்றளவும் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்றாலும் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்ற அணியாக பார்க்கப்படும் ஆர்சிபி அணி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு எப்படியாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக தற்போது ஒரு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில் அந்த அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் மற்றும் இயக்குனரான மைக் ஹெசன் ஆகிய இருவரும் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவருக்கும் பதிலாக புதிய இயக்குனரையும், புதிய பயிற்சியாளரையும் ஆர்சிபி அணி தேட துவங்கியுள்ளது. இந்த இரு இடங்களுக்கு முன்னாள் ஆர்சிபி வீரர்களான கிரிஸ் கெயில், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

மேலும் தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் டூ பிளெசிஸ் இன்னும் ஒரு வருடத்தில் 40 வயதினை எட்டிவிடுவார் என்பதனால் அவருக்கு பதிலாக கேப்டன் மாற்றமும் நடைபெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மைக் ஹஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோரது கூட்டணியில் பெங்களூரு அணி மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற முடிந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை