ஐபிஎல் 2021: பெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி!
கரோனா தொற்றால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வரவுள்ள செப்டர்ம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான வேலைகளில் மூழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தனிப்பட்ட காரணங்களினால் அமீரகம் செல்ல முடியாமல் உள்ள அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கட்ச்க்கு பதிலாக, மைக் ஹொசைன் தலைமை பயிற்சியாலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நடப்பு சீசனில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆடம் ஸாம்பா, டேனியல் சம்ஸ், ஃபின் ஆலன் ஆகியோருக்கு பதிலாக இலங்கை அணியின் வானிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா மற்றும் ஆஸ்திரேலியாவில் டிம் டேவிட் ஆகியோர் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட உள்ள ஆர்சிபி அணி வீரர்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.