Advertisement
Advertisement
Advertisement

Virat kohli

தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!
Image Source: Google

தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகும் விராட் கோலி!

By Bharathi Kannan November 29, 2023 • 10:52 AM View: 64

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடர் டிசம்பர் 10ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

Related Cricket News on Virat kohli