ரோஹித், விராட் கோலியின் அறிவுரை ஏற்று நடந்துவருகிறேன் - இஷான் கிஷான்!

Updated: Wed, May 11 2022 20:34 IST
Ishan Kishan Talks About His Dip In Form In The Ongoing IPL 2022 (Image Source: Google)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் ஆனார் இஷான். மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வீரருக்கு ரூ.10 கோடிக்கு மேல் பணத்தை ஏலத்தில் செலவளித்தது. 

சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அரைசதம் அடித்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபார்ம் சரிந்ததால், இஷானின் ஃபார்மும் அடிபட்டது.

அடுத்த ஆறு ஆட்டங்களில் இஷான் அடித்த ரன்கள் முறையே 14, 26, 3, 13, 0, 8 ஆகும். மும்பை அணி தனது முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்தது. இருப்பினும், அணியின் முதல் வெற்றி பெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்தார், ஆனால் மும்பை மீண்டும் தோல்வியடைந்ததால் அந்த அரைசதம் வீணாக முடிந்தது. 

தனது சீரற்ற ஃபார்ம் குறித்து பேசிய இஷான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அழுத்தத்தில் சிக்கி தாம் தவித்ததாகவும், மூத்த வீரர்கள் சிலர் அறிவுறுத்தலை அடுத்து தற்போது இயல்பாக விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஏலத்திற்குப் பிறகு அதிக விலைக் தொகையின் அழுத்தம் உங்கள் மீது இருக்கும். ஆனால் இந்த நிலையில், இதுபோன்ற விஷயங்களை என்னால் மனதில் வைக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது அணியின் வெற்றிக்கு எப்படி உதவுவது என்பதில் நான் கவனம் செலுத்த வேண்டும். விலைக் குறியின் அழுத்தம் நிச்சயமாக சில நாட்களுக்கு இருக்கும். ஆனால் உங்களைச் சுற்றி இதுபோன்ற நல்ல மூத்தவர்கள் இருக்கும்போது, அவர்களுடன் நீங்கள் தொடர்ந்து பேசும்போது, அது உதவுகிறது.

ஆர்சிபி மற்றும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நான் ரோஹித், விராட் கோலி பேசியபோது, அனைவரும் என்னிடம் ஒரே விஷயத்தை சொன்னார்கள், நீ அதிக விலைக் தொகையைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. தொகையின் அழுத்தத்தைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, எனது ஆட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். 

எனவே மூத்த வீரர்களுடன் பேசுவது உண்மையில் உதவியது. அவர்கள் பல போட்டிகளில் விளையாடி வெவ்வேறு சூழ்நிலைகளைக் கையாண்டுள்ளனர். அவர்களுக்கும் , ஒரு கட்டத்தில், ஏல விலை உயர்ந்திருக்கும். அதனால் அவர்கள் நிலைமையை எப்படிக் கையாண்டார்கள் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

தற்போது நான் மிகவும் இலகுவாக உணர்கிறேன். எனக்கான ஏலத் தொகையை பற்றி நான் யோசிக்கவில்லை, அது எனக்கு இரண்டாம் பட்சம். நீங்கள் ஃபார்மில் இல்லாதபோதும், மற்ற வீரர்களின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை