துலீப் கோப்பை - கிழக்கு மண்டல அணி அறிவிப்பு; இஷான் கிஷானுக்கு கேப்டன் பொறுப்பு!
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிற்தி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கிழக்கு மண்டல அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷா தலைமையிலான இந்த அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங் உள்ளிட்டோர் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுதிப் சட்டர்ஜிக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட விராட் சிங் மற்றும் ஷரன்தீப் சிங் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டல அணி இஷான் கிஷன் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டேனிஷ் தாஸ், ஸ்ரீதாம் பால், சரண்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உத்கர்ஷ் சிங், மனிஷி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி
Also Read: LIVE Cricket Score
கூடுதல் வீரர்கள்: முக்தர் ஹுசைன், ஆஷிர்வாத் ஸ்வைன், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்