டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை!

Updated: Mon, Jun 13 2022 22:12 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 553 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 539 ரன்களும் எடுத்தன. 

இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே மோசமாக இருந்தது.

முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த கேப்டன் டாம் லாதமை க்ளீன் போல்டாக்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் வீழ்த்தும் 650ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வேகப்பந்துவீச்சாளரும் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இல்லை. இதன்மூலம், 650 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

  •     முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்
  •     ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்
  •     ஜேம்ஸ் ஆண்டர்சன் - 650 விக்கெட்டுகள் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை