இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாம் வரிசையில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதியதுடன் 93 ரன்னில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - டிம் சௌதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்துள்ளது.இதில் கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களையும், டிம் சௌதீ 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷொயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சரித்திரம் படைத்துள்ளார். அதன்படி, இந்த போட்டியின் மூலம் ஜோ ரூட் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150ஆவது போட்டியில் விளையாடினார். இதன்மூலம் சர்வதேச டெஸ் கிரிக்கெட்டில் 150 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 4ஆவது இங்கிலாந்து வீரர் மற்றும் சர்வதேச அளவில் 10ஆவது வீரர் எனும் பெருமைகளையும் பெற்றுள்ளார்.
அதன்படி சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களில், 200 போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 போட்டிகளில் விளையாடி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் விளையாடி மூன்றாம் இடத்தையும், ஸ்டீவ் வக் 168 போட்டிகளில் விளையாடி 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 200 போட்டிகள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 188 போட்டிகள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 168 போட்டிகள்
- ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 168 போட்டிகள்
- ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 167 போட்டிகள்
- ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 166 போட்டிகள்
- ஷிவ்நைரன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 164 போட்டிகள்
- ராகுல் டிராவிட்(இந்தியா) - 164 போட்டிகள்
- அலெஸ்டர் குக் (இங்கிலாந்து) - 161 போட்டிகள்
- ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 156 போட்டிகள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 150 போட்டிகள்