ஐபிஎல் 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய மூன்று வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் தங்கள் பெயர்களை பதிவுசெய்திருந்தனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு பங்கேற்கும் 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள மூன்று அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தற்சயம 42 வயதை எட்டியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்பதன் மூலம், ஐபிஎல் தொடர் மெகா ஏல வரலாற்றில் இடம்பெறும் மிக வயதான வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இந்த ஏலத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் பரீட்சையமில்லாத வீரரான அண்டர்சனை எந்த அணியும் உண்மையில் எடுத்தால் ஆச்சரியமாக இருக்கும். சர்வதேச அளவில் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2. ஃபாஃப் டூ பிளெசிஸ்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தற்சமயம் 40 வயதான ஃபாஃப் டு பிளெசிஸ் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் இன்னும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார் மற்றும் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி வருகிறார். அதனால் அவரால் இன்னும் இரண்டு சீசன்கள் விளையாட முடியும். இது தவிர, ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு அதிகம். அதுமட்டுமில்லாமல் உலகெங்கிலும் நடைபெறும் டி20 போட்டிகளிலும் டூ பிளெசிஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,571 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 37 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. முகமது நபி
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் வீரராக ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த 39 வயதான அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் முகமது நபி. கடந்த சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவரும் உலகெங்கிலும் நடந்து வரும் டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். அரலால் பேட்டிங் செய்வதுடன், பந்துவீச்சிலும் அணிக்கு பங்களிப்பை செய்ய முடியும். முகமது நபி இதுவரை ஐபிஎல் தொடரில் 24 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில், 143.33 ஸ்ட்ரைக் ரேட்டின் உதவியுடன் 215 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.