டி20 உலகக்கோப்பை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Aug 10 2021 10:12 IST
Image Source: Google

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா பரவல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இத்தொடருக்கான அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்கு முன்னதாக பல டி20 தொடர்களிலும் அணிகள் விளையாடி வருகின்றன. 

அந்தவகையில் நியூசிலாந்து அணி இம்மாத இறுதியில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை, வங்கதேச தொடர், பாகிஸ்தான் தொடர் ஆகியவற்றிற்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், டி20 உலகக்கோப்பை தொடரில் அணியை வழிநடத்துவார் என்றும் தெறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க வகையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் லோக்கி ஃபர்குசன், கைல் ஜேமிசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

 

நியூசிலாந்து டி 20 உலகக் கோப்பை அணி: கேன் வில்லியம்சன் (கே), டாட் ஆஸ்டல், ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லோக்கி ஃபர்குசன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், டாரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சைஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுதி, ஆடம் மில்னே .

வங்கதேச டி 20 மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கே) , ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் ப்ளண்டெல், டக் பிரேஸ்வெல், கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி (ஒருநாள் போட்டிக்கு மட்டும்), ஸ்காட் குகலைன், கோல் மெக்கோஞ்சி, ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ் (டி 20-க்கு மட்டும்), பிளேர் டிக்னர், வில் யங்.

பாகிஸ்தான் டி 20 தொடருக்கான நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கே), ஃபின் ஆலன், டாட் ஆஸ்டல், ஹமிஷ் பென்னட், டாம் ப்ளண்டெல், மார்க் சாப்மேன், கொலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, டாரில் மிட்செல், அஜாஸ் பட்டேல், இஷ் சோதி, பென் சியர்ஸ், பிளேயர் டிக்னர், வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை