ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; கேன் வில்லியம்சன்னிற்கு ஓய்வு!

Updated: Tue, Jul 08 2025 11:08 IST
Image Source: Google

Zimbabwe vs New Zealand Test Series 2025:  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன்னுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூலை 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 30ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதியும் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லேதம் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் மேத்யூ ஃபிஷருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள மேத்யூ ஃபிஷர் 14 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவனத்தியும் ஈர்த்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மைக்கேல் பிரேஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் விளையாடாத நிலையில், கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் உள்ளிட்டோரும் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக அஜாஸ் படேல் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் அஜாஸ் படேல் கடந்தாண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஹென்றி நிக்கோலஸ் கடந்த 2023ஆம் ஆண்டிற்கு பின் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலீப்ஸ், மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (C), டாம் ப்ளண்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நாதன் ஸ்மித், வில் யங்

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை