Kane Williamson Test XI: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார். 

Advertisement

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரராகவும் இருப்பவர் கேன் வில்லியம்சன். இவர் இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் 186 இன்னிங்ஸ்களில் 9276 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 33 சதங்கள் மற்றும் 37 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேன் வில்லியம்சன் 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய ஆல்டைம் சிறந்த லெவனைத் தேர்வு செய்துள்ளார். 

Advertisement

அவர் தனது அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒருவர் என இந்த அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் விரேந்திர சேவாக் மற்றும் அஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை தேர்தெடுத்துள்ளார். 

மூன்றாம் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்ததுடன் இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார். மேற்கொண்டு 4ஆம் வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரையும், 5ஆம் வரைசயில் அஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் 6ஆம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார். 

இதுதவிர்த்து அவர் தனது அணியில் எந்தவொரு ஆல் ரவுண்டரையும் தேர்வு செய்யாம, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முத்தையா முரளிதரனையும் தனது லெவனில் சேர்த்துள்ளார்.

இருப்பினும் அவர் தனது அணியில் இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இதில் ஜோ ரூட் 13+ஆயிரம் ரன்களையும், விராட் கோலி 9+ ரன்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 700+ விக்கெட்டுகளை வீழ்த்தி சம காலத்தில் சிறந்த வீரர்களாக இருந்த நிலையில் அவர்களுக்கு வில்லியம்சன் வாய்ப்பு வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

கேன் வில்லியம்சன் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் லெவன்: மேத்யூ ஹைடன், வீரேந்தர் சேவாக், ரிக்கி பாண்டிங் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், க்ளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News