இந்த ஆட்டத்தின் மேட்ச் வின்னர் நிதிஷ் தான் - கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய நிதீஷ் ரானா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு அதிரடியாக விளையாடி10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களைச் சேர்த்ததன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் நிதீஷ் ரானா வென்றார். சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணாவை நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வில்லியம்சன், “சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிதிஷ் ரானா ஒரு அற்புதமான வீரர். ஆனால் இப்போட்டியில் அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். மேற்கொண்டு அவர் ஸ்கெயர் திசையில் மிகவும் வலுவான வீரராக தெரிந்தார். அதேசமயம் இடது வலது பேட்டிங் காரணமாக அவருக்கு மூன்ராம் இடத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் இந்த போட்டியில் அவர் முன்னேறுவதற்கு இதுவே முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இன்னும் பல திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், ஆனால் இந்த ஆட்டத்தின் மேட்ச் வின்னர் நிதிஷ் தான். மேற்கொண்டு இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு அவர்களின் ஃபீல்டிங்கும் ஒரு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணியில் நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களிலும், கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.