கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது - கேன் வில்லியம்சன்

Updated: Mon, Mar 24 2025 20:45 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.  இத்தொடரில் தற்போது வரை மூன்று போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமால் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறது. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு நடத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன். இந்நிலையில் ஒரு நல்ல கேப்டனுக்குரிய அனைத்து குணங்களும் ஷுப்மன் கில்லிடம் உள்ளது என நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வில்லியம்சன், “ஷுப்மன் கில்லிற்கு சிறப்பான கிரிக்கெட்டை விளையாடும் திறமை உள்ளது. அவர் தனது சக வீரர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக உள்ளது, இது மிகவும் வலுவான தலைமைத்துவ குணமாகும். அந்த ஒரு வகையான நம்பிக்கை அதிகரிக்க கூடியதகும். எனவே இந்தியாவின் எதிர்காலத்தில் அவர் தலைமைப் பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.

ஒவ்வொரு தலைவருக்கும் அவர்களின் திறமைகளுடன் தொடர்புடைய வேலை இருக்கிறது, ஆனால் உங்களுடைய குழுவிற்கு சிறந்த தலைவரும் உங்களுக்குத் தேவை. சமீபத்தில் அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்ததன் மூலம், இந்திய அணி அவரை எதிர்காலத்திற்குத் தயார்படுத்து வருவது தெளிவாகிறது. இதன்மூலம் அவர் ரோஹித் சர்மா போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைமையின் கீழ் கேப்டசியை புரிந்துகொள்ள உதவும்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை