ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sun, Apr 10 2022 10:50 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - ப்ராபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - மதியம் 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும் கடந்த முறை பேட்டிங்கில் தடுமாறியதை மறுக்க முடியாது. ஒரு ஆட்டத்தில் ஆண்ட்ரோ ரஸலும் மற்றொரு ஆட்டத்தில் பேட் கம்மின்ஸும் தான் காப்பாற்றினர். 

எனவே கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஒரு சிலர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். தொடக்க வீரராக களமிறங்கும் ரஹேனாவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் பாபா இந்தரஜித், ஆரோன் பிஞ்ச் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

அதேசமயம் மும்பைக்கு எதிராக வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதன் பிறகு குஜராத், லக்னோவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் 150 ரன்களை கூட விரட்ட முடியாமல் போனது. 

டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிகின்றது. இதனால் வார்னர், ரிஷப் பண்ட், பொவேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அணியில் வெற்றி பெற முடியும்.

நேருக்கு நேர்

  • மோதும் அணிகள் - 29
  • டெல்லி வெற்றி - 13
  • கொல்கத்தா வெற்றி - 16

உத்தேச அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரோ ரஸ்ல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ்,ராஷிக் சலாம், வருண் சக்ரவர்த்தி.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஷ்தபிசூர் ரஹ்மான் .

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - சர்பராஸ் கான், பிரித்வி ஷா, டேவிட் வார்னர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை