பிஎஸ்எல் 2022: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கலந்தர்ஸ்!

Updated: Mon, Feb 28 2022 12:07 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 69 ரன்களையும், ஹேரி ப்ரூக் 41 ரன்களையும் சேர்த்தனர். சுல்தான்ஸ் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய முல்தான் சுல்தான்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 19.3 ஓவர்களில் முல்தான் சுல்தான்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களைச் சேர்தது. கலந்தர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி பிஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை