ஷதாப் கான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஃப்ரிடி!
Shaheen Afridi Record: பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடரின் மூலம் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இது அணிகளுக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரின் மூலம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை 81 டி20 போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைச் செய்துள்ளார். இந்நிலையில் இந்த முத்தரப்பு தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி 9 விக்கெட்டுக்ளை கைப்பற்றும் பட்சத்தில், பாகிஸ்தானுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெறுவார்.
தற்சமயம் ஷதாப் கான் 112 டி20 போட்டிகளில் 112 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்காக 87 போட்டிகளில் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹாரிஸ் ரவூஃப் இந்த சிறப்பு சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்கள்
- ஹாரிஸ் ரவூப் - 87 போட்டிகளில் 120 விக்கெட்டுகள்
- ஷாதாப் கான் - 112 போட்டிகளில் 112 விக்கெட்டுகள்
- ஷாஹீன் அப்ரிடி - 81 போட்டிகளில் 104 விக்கெட்டுகள்
- ஷாஹித் அப்ரிடி - 98 போட்டிகளில் 97 விக்கெட்டுகள்
- சயீத் அஜ்மல் - 64 போட்டிகளில் 85 விக்கெட்டுகள்
Also Read: LIVE Cricket Score
பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் சுஃப்யான் முகிம்.