தனது அதிரடி ஆட்டம் குறித்து ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!

Updated: Fri, Sep 03 2021 13:31 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் தனது அதிரடி மூலம் அரை சதம் விளாசி அசத்தினார்.

ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஷர்துல் தாகூர் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில் தனது அதிரடி குறித்து பேட்டி அளித்த ஷர்துல் தாகூர் கூறுகையில், “இங்கிலாந்து மண்ணில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின்றன. இதன் காரணமாகவே பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்து விடுகின்றனர்.

இதுபோன்ற மைதானங்களில் கிராஸ் பேட் ஷாட்டுகளை ஆடுவதை விட ஸ்ட்ரைட்  ஷாட்டுகளை ஆடினால் நிச்சயம் ரன்கள் நமக்கு கிடைக்கும். இந்த முதலாவது இன்னிங்சில் நான் அதன் காரணமாகவே ரன்களை சேர்க்க நினைத்தேன். மேலும் அணி இருந்த சூழலில் எனது அதிரடி தேவை என்பதனால் நான் என்னுடைய அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தினேன்” என தெரிவித்துள்ளார். 

 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

அதேபோன்று இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக அடிக்கப்பட்ட டெஸ்ட் அரைசதமாகவும் ஷர்துல் தாகூரின் இந்த ஸ்கோர் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::