ரஞ்சி கோப்பை 2025: ஷர்தூல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு!

Updated: Fri, Oct 10 2025 21:17 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன், அந்தவகையில் நடப்பு ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்கியா ரஹானே விலகிய நிலையில், அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தத்தை அடுத்து, தற்போது ஷர்தூல் தாக்கூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் இந்த அணியில் அஜிங்கியா ரஹானே, சர்ஃப்ராஸ் கான், ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே  ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடாத முஷீர் கானுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் இளம் தொடக்க வீரரான ஆயூஷ் மாத்ரேவும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இருப்பினும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஏனெனில் அவர் இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியை வழிநடத்தவுள்ளார். இதனால் அவர் முதல் சில போட்டிகளில் அணியில் இடம் பிடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேற்கொண்டு பிரித்வி ஷா, மும்பை அணியில் இருந்து விலாகி மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடவுள்ளார். இதனால் முக்கிய வீரர்கள் இன்றி மும்பை அணி முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

மும்பை ரஞ்சி அணி: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தாமோர், சித்தேஷ் லாட், அஜிங்கியா ரஹானே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, சில்வெஸ்டர் டிசோசா, இர்பான் உமைர், முஷீர் கான், அகில் ஹெர்வாட்கர், ராய்ஸ்டன் டயஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை