அபாரமான கேட்ச்சை பிடித்த டக்கெட்; அரைசதத்தை தவறவிட்ட ஷர்தூல் - காணொளி
Ben Duckett Catch: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் அபாரமான கேட்சைப் பிடித்ததுடன் ஷர்தூல் தாக்கூர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தடுத்து நிறுத்தினார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் ஜடேஜா 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும் சோபிக்க தவறிய நிலையில், அரைசதம் கடந்த ரிஷப் பந்தும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இப்போட்டியில் பென் டக்கெட் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 102ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரை ஷர்தூல் தாக்கூர் எதிர்கொண்டார். அப்போது ஓவரின் 4ஆவது பந்தை ஷர்தூல் தக்கூர் ஸ்டிரைட் டிரைவ் அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த பந்தானது அவரது பேட்டில் எட்ஜாகி கல்லி திசையை நோக்கி சென்றது.
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பென் டக்கெட் அபாரமான டைவை அடித்தது அபாரமான கேட்சைப் பிடித்தார். இதனால் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷர்தூல் தாக்கூர் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் பென் டக்கெட் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.