ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 16 2022 11:47 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. 

எனவே முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கும் மும்பை அணி, நாளை(ஏப்ரல் 16) மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை எதிர்கொள்கிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்த சீசனில் இதுவரை ஆடிய  5 போட்டிகளிலுமே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே இன்றைய போட்டி மிகக்கடுமையாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே இதுவரை மும்பை அணி ஆடிவந்தது. 

அதனால் இன்றைய போட்டியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் மறுபுறம் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் நீடிக்கிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் ராகுல், டி காக் ஆகியோருடன் ஆயூஷ் பதோனி, தீபக் ஹூடா ஆகியோரும் இருப்பது கூடுதல் பலத்தைக் கூட்டுகிறது. பந்துவீச்சில் ஹோல்டர், ஆவேஷ் கான், ரவி பிஸ்னோய் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச அணி 

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்டு, முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெய்தேவ் உனாத்கத்/ ரிலே மெரிடீத், டைமல் மில்ஸ், பசில் தம்பி.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ் - திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஆயுஷ் பதோனி
  • ஆல்-ரவுண்டர்கள் - தீபக் ஹூடா, டெவால்ட் ப்ரீவிஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், டைமல் மில்ஸ், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை