NED vs NZ, 2nd T20I: சாண்ட்னர் அதிரடியில் நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஹாக்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட் 6 ரன்களிலும், விக்ரம்ஜிட் சிங் 3 ரன்களிலும், ஸ்டீபன் மைபர்க் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பாஸ் டி லீட் அதிர்டியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு துணையாக டாம் கூப்பர் மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாஸ் டி லீட் அரைசதம் கடந்ததுடன், 53 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில், ஃபின் ஆலன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் மிட்செல் சாண்ட்னர் - டெரில் மிட்செல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதில் இதில் சண்ட்னர் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையிலிருந்த மிட்செலும் அரைசதத்தப் பூர்த்தி செய்தார்.
இதன்மூலம் நிசிலாந்து அணி 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் சாண்ட்னர் 77 ரன்களையும், டெரில் மிட்செல் 51 ரன்களையும் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.