NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரோட்டர்டேமில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - கேப்டன் பாபர் ஆசாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் 74 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டததை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் சதமடித்து மிரட்டினார். அதன்பின் 109 ரன்களில் அவரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 14, குஷ்டில் ஷா 21 என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷதாப் கான் - அகா சல்மான் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதாப் கான் 48 ரன்களுடனும், அகா சல்மான் 27 ரன்களையும் சேர்த்தனர்.