டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Nov 06 2021 16:09 IST
Image Source: Google

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கே அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் -  நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நடப்பு சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இருப்பினும் நாளைய போட்டியில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே சுலபமாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறமுடியும். அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நட்சத்தி வீரர்கள் இருப்பதால் நிச்சயம் அந்த அணி நாளைய போட்டியில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பே உள்ளது. 

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு சீசனில் விளையாடிய நான்கு போட்டியிகளில் இரண்டு தோல்வி, இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. 

நாளைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தால் நிச்சயம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. 

மேலும் நாளைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 2
  • நியூசிலாந்து வெற்றி - 2
  • ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 0

உத்தேச அணி

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்

ஆஃப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி (கே), நஜிபுல்லா ஸத்ரான், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரஃப், குல்பாதின் நைப், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹசன்.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்தில், ஹஸ்ரதுல்லா ஸஸாய், கேன் வில்லியம்சன்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி, குல்பாதின் நைப், ஜேம்ஸ் நீஷம்
  • பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், ரஷித் கான், இஷ் சோதி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை