ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Tue, Nov 11 2025 20:51 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வேலைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதனால் இந்த் சூழலிற்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானுடன் இந்த டி20 தொடரில் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் மேலாளர், "இந்தத் தொடர் எங்கள் தயாரிப்புக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. துணைக்கண்ட நிலைமைகளில் வலுவான எதிர்ப்பை எதிர்கொள்வது எங்கள் சேர்க்கைகளையும் அணுகுமுறையையும் கூர்மைப்படுத்த உதவும், மேலும் இது இந்தியா மற்றும் இலங்கையில் நாம் எதிர்கொள்ளும் மேற்பரப்புகளைப் போன்ற மேற்பரப்புகளில் எங்கள் வீரர்களுக்கு நம்பிக்கையை வளர்க்க வாய்ப்பளிக்கிறது" என்று கூறியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் சிஇஓ கூறுகையில், “உலகக் கோப்பை தொடருக்கு முன் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக போட்டியிடுவது, எங்கள் அணியை நாங்கள் தயார் செய்ய உதவும். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் தொடருக்கான தயாரிப்புகளை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.அணியின் தயாரிப்பு செயல்முறையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை