டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Nov 13 2021 14:58 IST
New Zealand vs Australia, T20 World Cup Final – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)

ஏழாவது வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதுநாள் வரை இரு அணிகளும் டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால், எந்த அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம்- துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை டெரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன் என அதிரடி பேட்டிங் வரிசையும், போல்ட், சௌதி, மில்னே என வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு பலமான அணியாக திகழ்கிறது. 

அதேசமயம் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தானுடனான போட்டியில் அபாரமாக செயல்பட்டு இறுதிக்கு முன்னேறியுள்ளது. வார்னர், மேதியூ வேட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் அந்த அணி எதிரணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடி, அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றுள்ளது. இதனால் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி பழிதீர்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்  -14
  • நியூசிலாந்து வெற்றி - 5
  • ஆஸ்திரேலிய வெற்றி - 9

உத்தேச அணி

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டிம் செஃபெர்ட், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் (கே), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ வேட்
  • பேட்டர்ஸ் - மேத்யூ வேட், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜிம்மி நீஷம், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சாளர்கள் - இஷ் சோதி, டிரென்ட் போல்ட், ஆடம் ஸாம்பா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை