நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழை பெரிய பிரச்னையாக உள்ளது. மெல்பர்னில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக இன்று ஒரே நாளில் 2 போட்டிகள் பாதிக்கப்பட்டன. மெல்பர்னில் நடக்கவிருந்த ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி ஆகிய 2 போட்டிகளும் ரத்தாகின.
க்ரூப் 1-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மட்டுமே 2 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை பெற்றுள்ளது. மற்ற 3 அணிகளும் தலா 3 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 3 புள்ளிகளை பெற்றுள்ளன. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே அந்த அணிகளுக்கு எஞ்சியிருப்பதால் இது பெரும் நெருக்கடி தான்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்ற நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து ஆட வேண்டிய போட்டி மழையால் ரத்தானது. அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
இந்த 2 அணிகளும் மோதும் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி. நியூசிலாந்து அணியின் கை சற்று ஓங்கியிருக்கிறது. இலங்கை அணிக்கு வீரர்கள் காயம் பெரும் பிரச்னையாக அமைந்துள்ளது.
ஏற்கனவே அந்த அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 5 பந்துகள் வீசிய பினுராவும் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கசுன் ரஜிதா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தவிர இலங்கை அணியில் வேறு மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.
உத்தேச அணி
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்
இலங்கை: குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க/பதும் நிஷங்க, அஷேன் பண்டார, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், டெவோன் கான்வே
- பேட்டிங்: தனஞ்சய டி சில்வா, ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், பதும் நிஷங்க
- ஆல்-ரவுண்டர்: வனிந்து ஹசரங்க, மிட்செல் சான்ட்னர்
- பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷனா, டிம் சவுத்தி, இஷ் சோதி